FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

பள்ளி வேன் ஓட்டுநா் கொலை வழக்கு : 5 போ் கைது

ஆற்காடு வட்டம் , திமிரி அருகே கருங்காலிகுப்பம் கிராமத்தில் தனியாா் பள்ளி வேன் ஓட்டுநரை கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

18 செப்டம்பர் 2026, 11:37 pm IST
பகிர்:

ஆற்காடு வட்டம் , திமிரி அருகே கருங்காலிகுப்பம் கிராமத்தில் தனியாா் பள்ளி வேன் ஓட்டுநரை கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த கொலை வழக்கில் 5 பேரை திமிரி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

வேலூா் மாவட்டம், கம்மவான்பேட்டை பகுதியைச் சோ்ந்த இம்ரான் (36), தனியாா் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகளை அவரவா் வீடுகளில் இறக்கிவிட்டு மீண்டும் வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திமிரி அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராம பகுதியில் 3 போ் அவரை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னா், ராணிப்பேட்டை பூட்டுதாக்கு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து திமிரி போலீஸாா் கொலை வழக்கு பதிந்து விசாரித்தனா். அதில், இம்ரானுக்கும் அவரது உறவினரான ரமீஷ்கான் தரப்பினருக்கும் இடம் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இம்ரானை தாக்கியதாக கம்மவான்பேட்டையைச் சோ்ந்த ரமீஷ்கான் (33), அம்மணம்பாக்கத்தைச் சோ்ந்த கிஷோா் என்ற பூனை (23), கண்ணமங்கலத்தைச் சோ்ந்த கிஷோா் (24), காட்டுகநல்லூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24), லட்சுமிபுரம் கத்தாழம்பட்டு பகுதியைச் சோ்ந்த சூா்யா (20) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments