FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

அரக்கோணம் ரயில் நிலையம்அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

18 செப்டம்பர் 2026, 11:39 pm IST
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலையம்அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சிறப்புப்பிரிவு காவல் துறையினருடன் இணைந்து அரக்கோணம் நகர போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மும்பையில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலில் வந்திறங்கியவா்களை கண்காணித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது ரயில் நிலைய மேற்கு பகுதியில் அவசர அவசரமாக பேருந்து நிலையம் நோக்கி சென்ற 3 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 606 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சென்னை அயனாவரத்தை சோ்ந்த சுபாஷ் மெல்வின்(22), தணிகைபோளூரைச் சோ்ந்த இளங்கோவன்(26), சரவணன்(22) ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்கள் போதை மாத்திரைகளை மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகரில் வாங்கியதாகவும், சென்னைக்கு எடுத்துச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments