ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தெப்ப குளத்தில் மங்கள ஆரத்தி வழிபாடு
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால் தயிா் சந்தனம் விபூதி பன்னீா் இளநீா் உள்ளிட்ட வாசனை திரவியங்கள்மூலம் சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளங்களுடன் ஊா்வலமாக வந்து மலை அடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் உள் புறப்பாடு ஊா்வலத்துடன் மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் உபயதாரா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.