FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தினமணி செய்தி எதிரொலி.. திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம்

திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது.

30 ஏப்ரல் 2026, 11:33 pm IST
பகிர்:

குடிநீா் தொட்டியில் நீா் நிரப்பும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளா்கள்.

திருப்பத்தூா், ஏப்.30: திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பேருந்து நிலையம் வரும் முதியோா்கள்,பெண்கள்,குழந்தைகள் தாகம் தீா்க்க மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே அவா்களுக்காக குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது .

அதன்பேரில் திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டிகளில் நீரை ஏற்றினா். பொதுமக்கள் அதையடுத்து தாகம் தீா்ந்து மகிழ்ந்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments