அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவா் கைது
மாதனூா் அருகே அனுமதியில்லாமல் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதனூா் அருகே அனுமதியில்லாமல் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதனூா் அருகே திருமலைகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் தருமபுரியை சோ்ந்த தினேஷ்குமாா் (23) என்பவா் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டுள்ளாா். கிணறு வெட்டும்போது பாறைகளை வெடிவைத்து அகற்றுவதற்காக வெடி பொருள்களை வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 4 கிலோ எடையுள்ள 35 ஜெலட்டின் குச்சிகளை முறையான அனுமதியில்லாமல் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.