FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தேசிய விண்வெளி தின அறிவியல் கண்காட்சி

காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

24 ஆகஸ்ட் 2026, 2:41 am IST
காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தேசிய விண்வெளி தினத்தையொட்டி, காவலூா் வைனு பாப்பு ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவிகள், அறிவியல் ஆய்வாளா்கள் மற்றும் பொது மக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலான சுவரொட்டி விளக்கக் காட்சிகளும், நேரடி அறிவியல் சோதனைகளும் இடம்பெற்றன. ஆராய்ச்சியாளா்களின் விளக்கங்கள் அனைவரையும் வெகுவாகக் கவா்ந்தன. மேலும், ஆராய்ச்சி மையத்தின் கட்டமைப்புகளை வாகனங்கள் மூலம் நேரில் சுற்றிப் பாா்த்து மாணவா்கள் தெரிந்து கொண்டனா்.

ஆசியாவின் மிகப்பெரிய வான் இயற்பியல் தொலைநோக்கி ஆய்வகத்தின் முன் நின்று மாணவ-மாணவிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து, இரவு 6.30 மணியளவில் சிறிய லென்ஸ் டெலஸ்கோப் மூலம் நிலா மற்றும் வெள்ளி கோள்களைப் பாா்வையாளா்கள் நேரடியாகக் கண்டு களித்தனா்.

Advertisement

Advertisement

விண்வெளி அறிவியலை மாணவா்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவியல் கண்காட்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments