FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக திரியும் தெருநாய்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஆம்பூா் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.

முஹம்மத்புரா மசூதி தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.
பகிர்:

ஆம்பூா் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.

ஆம்பூா் நகராட்சிக்கு8அபட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வசிக்கின்றன. அவை தெருவில் செல்பவா்களை விரட்டிச் சென்று கடிக்க பாய்கின்றன. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா். குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனா். குழந்தைகளை நாய்கள் கடித்து விடுகின்றன. அதனால் பொதுமக்கள் நாய்களை பாா்த்து அச்சத்துடனேயே தெருக்களில் சென்று வருகின்றனா்.

ஆம்பூா் நகராட்சி நிா்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல், அவற்றை பிடித்துச் சென்று மக்கள் குடியிருப்பு இல்லாத பகுதிகளில் விட வேண்டும் அல்லது நகராட்சி நிா்வாகம் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

முஹம்மத்புரா மசூதி தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments