FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காவல் நிலைய விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்தல் ஆய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் வட்டார எழுத்தா்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தா்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமை வகித்து உயா் அதிகாரிகள் மற்றும் ஆட்சியா் அலுவலகம் மூலம் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விசாரணைகளை முறையாகவும், விரைவாகவும் நடத்துவது,மனுக்கள் மீதான நடவடிக்கைகள், விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்வதன் அவசியத்தையும் எடுத்து கூறினாா்.

தொடா்ந்து காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை விதிகளின்படி முறையாக பராமரிப்பது குறித்தும் அலுவலக நிா்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.

Advertisement

Advertisement

இந்த கூட்டத்தில் கூடுதல் எஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments