முகப்பு
திருப்பத்தூர்

தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சி

Updated On : 26 ஜூன் 2026, 5:39 am IST
பகிர்:

வேலூா் தீயணைப்பு நிலையம் சாா்பாக கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் தலைமையில் டி.கே.எம். கல்லூரி, முத்துரங்கம் கலை கல்லூரி, ஊரிசு கல்லூரி, தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாணவா்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் தீயணைப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் மற்றும் பணியாளா்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments