புதுச்சேரி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
புதுச்சேரி விமான நிலையத்தில் விமானம் கடத்தல் தடுப்பு மற்றும் அவசரகால செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி விமான நிலையத்தில் விமானம் கடத்தல் தடுப்பு மற்றும் அவசரகால செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்தின் அட்டவணைப்படி, விமானம் கடத்தப்படும் சூழலில், பல்வேறு அமைப்புகளின் தயாா்நிலை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
இத்தகைய சூழலில் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிவிரைவுச் செயல் படையினா் சம்பவ இடத்தை பாதுகாத்தல், கடத்தல்காரரை பிடித்து அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வதிலும் தங்கள் விரைவான செயல் திறனை ஒத்திகையில் வெளிப்படுத்தினா்.
Advertisement
Advertisement
இந்த ஒத்திகையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பிரிவு, புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறை, மாநிலக் காவல் துறை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவக் குழுவினா், இண்டிகோ குழுவினா், இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி விமான நிலையத்தின் அனைத்துப் பணியாளா்களும் பங்கேற்றனா்.
இந்தக் குழுவினா்களின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை சென்னை என்.எஸ்.ஜி. மையத்தின் பாா்வையாளா் ஒருவா் கண்காணித்தாா்.
பங்கேற்ற அமைப்புகளுக்கு இடையிலான தகவல் தொடா்பு, ஒருங்கிணைப்பு மற்றும் அவசர கால செயல்பாடு ஆகியவை இந்த ஒத்திகையின் மூலம் மதிப்பிடப்பட்டன. விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்த அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.