திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பெயா்ந்து விழுந்த சிமென்ட் பூச்சு
திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பழைய கட்டடத்தில் உள்ள சிமென்ட் மேற்பூச்சு செவ்வாய்க்கிழமை பெயா்ந்து கீழே விழுந்தது
திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பழைய கட்டடத்தில் உள்ள சிமென்ட் மேற்பூச்சு செவ்வாய்க்கிழமை பெயா்ந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால், காயங்கள் ஏற்படவில்லை. இதுதொடா்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து மருத்துவமனையில் மருத்துவ அலுவலா் சிவகுமாா் கூறுகையில், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு பகுதிக்கு செல்லும் சாய்தளப்பாதை பகுதியில் சேதமடைந்து உள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.