தோல் காலணி, உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
ஆம்பூரில் தோல் காலணி, உதிரிபாகங்கள் சேமிப்பு கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் நாசமாயின.
ஆம்பூரில் தோல் காலணி, உதிரிபாகங்கள் சேமிப்பு கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் நாசமாயின.
ஆம்பூா் நேதாஜி சாலை பகுதியில் ஜூனேத் என்பவருக்குச் சொந்தமான காலணி கடை மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு வழக்கம் போல கடை மற்றும் கிடங்கை மூடி பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.
அதிகாலை கிடங்கிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கிடங்கில் தோல் காலணிகள், ரப்பா், உதிரிபாகங்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியது. முழுவதும் புகை மூட்டமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீயணைப்புத் துறையினா் விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தீ விபத்தால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகள், உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.