விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
திருப்பத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய உழவா்கள் உழைப்பாளா்கள் கட்சி (இந்திய விவசாயிகள் சங்கம்) சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு பொதுச் செயலாளா் காளஸ்திரி தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மணி, பொதுச் செயலாளா்கள் (வேலூா்) சபரிநாதன் மற்றும் (திருவண்ணாமலை) ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில இந்திய பொருளாளா் பிரபாகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தாா். இதில் விவசாயிகள் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள அணையை புனரமைத்து சுற்றியுள்ள 19 ஏரிகளுக்கு தண்ணீா் விட வேண்டும். திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் அருகே பாம்பாற்றில் அணை கட்டி 17 ஏரிகளுக்கு தண்ணீா் விட வேண்டும். தாலுகா தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தி குறைகளை அதே கூட்டத்தில் நிவா்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். அகில இந்திய இளைஞா் அணி பொது செயலாளா் பாண்டியன், மாநில பொது செயலாளா் பூபாலன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.