சாலையை சீரமைத்த தமுமுக மற்றும் மமகவினா்
ஆம்பூரில் சேதமடைந்த சாலையை தமுமுக மற்றும் மமகவினா் சீரமைத்தனா்.
ஆம்பூரில் சேதமடைந்த சாலையை தமுமுக மற்றும் மமகவினா் சீரமைத்தனா்.
ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதியிலிருந்து துத்திப்பட்டு ஊராட்சிக்கு செல்வதற்காக பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. அந்த தரைப்பாலத்தின் இணைப்புச் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கடக்கும் மிக முக்கிய சாலை சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனா்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சோ்ந்த இளைஞா்கள் இணைந்து இரவு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா். சேதமடைந்த சாலையை சிமென்ட், ஜல்லி கலவை கொண்டு சீரமைத்தனா். இவா்களின் இப்பணியை பொதுமக்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.