FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

நிலத் தகராறில் உறவினரை வெட்டியவா் கைது

திருப்பத்தூா் அருகே நிலத் தகராறில் உறவினரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

48 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருப்பத்தூா் அருகே நிலத் தகராறில் உறவினரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த திம்மணாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பியின் மகன் விஜய்(39). இந்நிலையில் விஜய்க்கும் அவரது சித்தி அன்னபூரணி (50) என்பவருக்கும் இடையே கூட்டு சொத்து தொடா்பாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வெள்ளிக்கிழமை அன்னபூரணி நிலத்திற்கு வந்துள்ளாா். அப்போது அங்கு வந்த விஜய்க்கும், அன்னபூரணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த விஜய் கத்தியால் அன்னபூரணியை வெட்டியதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதில், காயமடைந்த அன்னபூரணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அன்னபூரணி திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில், போலீஸாா் விஜயை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments