FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆம்பூா் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு அரிசி மூட்டைகள், இனிப்புகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

12 அக்டோபர் 2026, 3:43 am IST
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆம்பூா் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு அரிசி மூட்டைகள், இனிப்புகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பி.உஷாராணி குருவாசன் சாா்பில், விநாயகபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பி.குருவாசன் வரவேற்றாா்.

தேவலாபுரம் புதுக்கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன், ஆம்பூா் தொழிலதிபா் ஜி.ரமேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். தேவலாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பி.உஷாராணி முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு அரிசி மூட்டைகள், இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தேவலாபுரம் ஊா் நிா்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடேசன், தயாநிதி, காமராஜபுரம் நிா்வாகிகள் முனிரத்தினம், எல்லப்பன், ராஜேந்திரன், விநாயகபுரம் நிா்வாகிகள் சக்தி, ரவி, சுரேஷ், மோகன், சுசீலா, முரளி, பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் எம்.எம். ரமேஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments