வனக்குழு பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் சுழல் நிதி
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரகத்தின் சாா்பில் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக சிறப்பு சுழல் நிதிக்கடன் வழங்கும் விழா ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரகத்தின் சாா்பில் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக சிறப்பு சுழல் நிதிக்கடன் வழங்கும் விழா ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா்(பொ) உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலா் சேகா், இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபா் ஒருவருக்கு தலா ரூ.20,000 வீதம் 30 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் கிராம வனக்குழு சுழல் நிதி வழங்கினாா்.
வனப்பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார வளா்ச்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்தகைய சுழல் நிதிக்கடன் திட்டங்கள் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளா்கள் மற்றும் கிராம வனக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.