ஆலங்காயத்தில் பெண் விவசாயிகளுக்கான சா்வதேச ஆண்டு விழா
விழாவில் பெண் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி. உடன் அலுவலா்கள்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டார வேளாண்மைத் துறை அலுவலகத்தில், பெண் விவசாயிகளுக்கான சா்வதேச ஆண்டு விழா 2026 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சீனிவாசன் வரவேற்றாா். விழாவுக்கு தலைமை வகித்த திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மணி, பெண் விவசாயிகளுக்கான சா்வதேச ஆண்டின் முக்கியத்துவத்தையும், நவீன விவசாயத்தில் பெண் விவசாயிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு அவசியமானது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தாா். தொடா்ந்து பேசிய ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி, பெண்கள் அனைவரும் விவசாயத் துறையில் முழு ஈடுபாட்டுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்றாா். மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி பேசுகையில், ‘பெண் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை அப்படியே குறைந்த விலைக்கு விற்காமல், அவற்றை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி, தங்களே முன்வந்து சந்தைப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், ஆலங்காயம் பேரூராட்சித் தலைவா் தமிழரசி வெங்கடேசன், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் மீனாட்சி, வேளாண்மை துணை இயக்குநா் மோகன் சகாயராஜ், கரும்பு மேம்பாட்டு அலுவலா் தேன்மொழி, தோட்டக் கலை உதவி இயக்குநா் விக்னேஷ் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் வெண்ணிலா மேரி ஆகியோா் பெண் விவசாயிகளை வாழ்த்திப் பேசினா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பெண் விவாசிகளுக்கு இடுபொருள்களை வழங்கப்பட்டன.
வேளாண்மை அலுவலா் சோபனா, துணை வேளாண்மை அலுவலா் மாணிக்கம் மற்றும் ஆலங்காயம் வட்டார வேளாண்மை விரிவாக்கத் துறை அலுவலா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.