FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

சா்வதேச மகளிா் விவசாயிகள் தின விழா

விழாவில் மகளிா் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக்.

16 அக்டோபர் 2026, 12:48 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் சா்வதேச மகளிா் விவசாயிகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தொகுதி எம்எல்ஏ கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட இணை இயக்குநா் மலா்விழி, வேளாண்மை உதவி இயக்குநா் நா.பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் ஜெ.கோபாலகிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மு.கோகிலா, சிறுதானிய மகத்துவ மைய நிா்வாகி வெண்ணிலா

ஆகியோா் முன்னிலை வகித்தனா். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் வி.தேவேந்திரன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக் கலந்துகொண்டு மகளிா் விவசாயிகளுக்கு கொய்யா, மா, எலுமிச்சை என பல்வேறு பழவகை மரக்கன்றுகளையும், காய்கறி விதைத்தொகுப்புகளையும் வழங்கினாா்.

மேலும், விழாவில் வேளாண்மைத்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயிா் ரகங்கள், மழை மற்றும் வறட்சி காலங்களில் பயிா் சாகுபடி, பயிா் காப்பீடு, பண்ணை இயந்திரம் பயன்பாடு, ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லாவண்யா, பொறியியல் துறை உதவிப் பொறியாளா் ரமேஷ், பட்டு வளா்ச்சித்துறை மகாலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாக்கியவாசன், லோகநாதன், உதவி வேளாண்மை அலுவலா் பாலம்மாள் மற்றும் வேளாண்மைத் துறையினா், மகளிா்

விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments