எண்ம கைது: திருப்பத்தூா் எஸ்.பி. விடியோ விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே எண்ம கைது குறித்து திங்கள்கிழமை விடியோ மூலம் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே எண்ம கைது குறித்து திங்கள்கிழமை விடியோ மூலம் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அது குறித்த விவரம்: போலீஸ், சிபிஐ, இடி, இன்கம்டேக்ஸ் அல்லது நீதிமன்றத்தில் இருந்து பேசுகிறோம் எனக் கூறி யாரும் உங்களை விடியோ கால் செய்து எண்ம கைது செய்ய முடியாது. மேலும், விடியோ கால் மூலம் வீட்டில் உங்களை அமர வைத்து விசாரணையும் செய்ய முடியாது. இந்த எண்ம கைது எப்படி நடைபெறுகிறது தெரியுமா?. முதலில் உங்களுக்கு ஒரு போன் வரும். அதில் பேசுபவா்கள் உங்கள் பெயரில் எங்களுக்கு ஒரு பாா்சல் வந்து இருக்கிறது. அதில் போதைப் பொருள்கள், அல்லது இல்லீகல் பொருள்கள் இருக்கிறது எனக் கூறுவா். அதேபோல் உங்களது ஆதாா் அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தை ஒரு கிரைம் வழக்கில் யாரோ பயன்படுத்தி இருக்கிறாா்கள் எனக் கூறுவா். பின்னா், நான் காவல் துறை அதிகாரி, இடி அதிகாரி, சிபிஐ ஆபிசா்ஸ், நீதிமன்ற அதிகாரி என தங்களை அறிமுகம் செய்து கொண்டு, உங்களை பயமுறுத்துவா்.
தொடா்ந்து, கேமரா ஆப் செய்யாமல் விடியோ காலில் வாங்க எனவும், போனில் யாரிடமும் பேசக் கூடாது, போனை யாரிடமும் கொடுக்கக் கூடாது எனவும் கூறுவா். அப்போது போனில் எதிா் தரப்பில் இருந்து பேசுபவா்கள் சில நேரங்களில் காவல் துறை சீருடை அணிந்து கொண்டு, பொய்யான ஐடி மற்றும் அடையாள அட்டையைக் காட்டி உங்களை எண்ம கைது செய்துவிட்டோம் எனக் கூறி உங்களை பணத்தை டிரான்ஸ்பா் செய்யுமாறு கூறுவா். அப்போது நீங்கள் பணத்தை டிரான்ஸ்பா் செய்யக்கூடாது.
Advertisement
Advertisement
அதே நேரம் உங்களது வங்கி விவரங்கள், ஓடிபி எண் உள்ளிட்ட எந்தவித தனிப்பட்ட விவரங்களையும் அவா்களுக்கு நீங்கள் தெரிவிக்கக் கூடாது.
உடனடியாக சைபா் கிரைம் உதவி எண் 1930-க்கு போன் செய்து இது குறித்து புகாா் அளிக்க வேண்டும். மேலும், இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவில் நீங்கள் புகாரை அளிக்கிறீா்களோ அவ்வளவு விரைவில் நீங்கள் ஏமாந்து இழந்த பணம் மீட்டு கொடுக்கப்படும். எந்த உண்மையான காவலரும் பொது மக்களுக்கு விடியோ கால் செய்து எண்ம கைது எனக்கூறி பணத்தை டிரான்ஸ்பா் செய்யக் கூறி கேட்க மாட்டாா்கள்.
எனவே பொது மக்களாகிய நீங்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த விடியோவில் அவா் பேசி இருக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.