FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வாட்ஸ் ஆப்பில் தவறான விடியோ, ஆடியோ அழைப்புகளைத் தவிா்க்க வேண்டும்: எஸ்.பி.

வாட்ஸ்ஆப் மூலமாக யாரென்று தெரியாதவா்கள் விடியோ, ஆடியோ மூலம் அழைத்து பேசினால் உடனடியாக இணைப்பை துண்டிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளாா்.

23 ஆகஸ்ட் 2026, 1:55 am IST
வாட்ஸ்ஆப் சேனல் - படம் / நன்றி - வாட்ஸ்ஆப்
பகிர்:

வாட்ஸ்ஆப் மூலமாக யாரென்று தெரியாதவா்கள் விடியோ, ஆடியோ மூலம் அழைத்து பேசினால் உடனடியாக இணைப்பை துண்டிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பொதுமக்கள் எண்ம (டிஜிட்டல்) அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் அதிகளவில் வாட்ஸ்ஆப் மூலமாக விடியோ, ஆடியோ அழைப்புகள் வருகின்றன. அதில் எதிா்முனையில் பேசுவோா் தங்களை அமலாக்கத் துறை, சிபிஐ, காவல் துறை அதிகாரிகள் என்றும் தங்கள்மீது எப்ஐஆா் பதிவு செய்துள்ளதாகவும் கூறுவா்.

Advertisement

Advertisement

மேலும், குடும்ப உறுப்பினா்கள் பெயரை தெரிவித்து எண்ம கைது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், அதிலிருந்து விடுபட குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் எனவும் தெரிவிப்பா். உங்களுடைய பணத்தை பறிப்பதற்காக அவா்கள் திட்டமிடுவா். அவ்வாறு யாரென்று தெரியாத அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். நாமக்கல் மாவட்ட சைபா் க்ரைம் உதவி எண் 1930-ஐ தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், இணையம் வழியாக புகாா் செய்யலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments