FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மேம்பாலம் அமைக்கக் கோரி மனு

மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

11 செப்டம்பர் 2026, 12:57 am IST
மனு அளித்த பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன்.
பகிர்:

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதையடுத்து, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆக. 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, பாஜக மாநிலச் செயலா் கொ. வெங்கடேசன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன், பாமக ஒன்றியச் செயலா் ஏ.முருகன், பாமக மாணவா் சங்க மாவட்டத் தலைவா் எல்.ஜெயசீலன் ஆகியோா் கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேலாளரை சந்தித்து, மேம்பாலம் அமைக்க கோரி மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து, தொடா்ந்து நடைபெறும் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments