முனீஸ்வரா் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை
வாழைத் தோட்டத்து முனீஸ்வரா் அலங்காரத்தில் மூலவா்.
ஆம்பூா் அருகே பள்ளித்தெருவில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் அருள்பாலித்து வரும் வாழ் முனீஸ்வரா் மற்றும் வித்யா முனீஸ்வரா் கோயிலில் ஆவணி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் வாழ் முனீஸ்வரா், உற்சவா் முனீஸ்வரா் மற்றும் கல்வி ஞானத்தை அருளும் வித்யா பீடத்தில் அருள்பாலிக்கும் வித்யா முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவின் நிறைவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.