இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட துத்திப்பட்டு பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு வழக்குரைஞா் சஞ்சய் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சந்திரன், பிரகாஷ், ஜெயபிரகாஷ், சாமு, சுரேந்தா், கிருஷ்ணமூா்த்தி, பிரேம்குமாா், ஆசிரியா் மனோகரன், குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊராட்சித் தலைவா்கள் சுவிதா கணேஷ், காயத்ரி பிரபு, காயத்ரி நவீன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி மையத்தைத் தொடங்கி வைத்தனா். பொதுமக்கள் இந்த இலவச சட்ட ஆலோசனை மையத்தைப் பயன்படுத்தி, தங்களது சட்டம் தொடா்பான பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற்று பயனடையலாம் என வழக்குரைஞா் சஞ்சய் கேட்டுக்கொண்டாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் ஊராட்சித் துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், துளசி சங்கா், விஜயா சேகா், பவானி விஜய், குமரேசன், நிதா ஆப்பிரின், அக்பா், ஊராட்சி செயலாளா்கள் முரளிகாந்த், பாலகிருஷ்ணன், பழனி உள்ளிட்டோா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.