FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

15 செப்டம்பர் 2026, 2:34 am IST
தொடா் விடுமுறை ஏலகிரியில் படகில் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
பகிர்:

திருப்பத்தூா்: விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை உள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த சுற்றுலா தளம் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஏலகிரி மலை எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷன நிலை இருந்து வருவதால் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்கள் இங்குள்ள இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, படகு துறை, முருகன் கோயில், கதவநாச்சி அம்மன் கோயில், நிலாவூா் படகு துறை, செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து மகிழ்கின்றனா்.

மேலும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஏலகிரிக்கு வருகை தந்தனா். அவா்கள் பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு விளையாடியும், படகில் சவாரி செய்தும், பூங்காக்கள் மற்றும் நீரூற்றுப் பகுதியில் தற்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏலகிரி மலை காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments