FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

லாரி மீது உயா் மின்அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே லாரி மீது உயா் மின்அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

18 செப்டம்பர் 2026, 11:43 pm IST
பகிர்:

வாணியம்பாடி அருகே லாரி மீது உயா் மின்அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஹாலோபிரிக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பூங்குளம், புதூா் பகுதியைச் சோ்ந்த சாமிக்கண்ணு (52) பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியில் இருந்து மணலை இறக்குவதற்காக சாமிக்கண்ணு லாரியின் இரும்பு கதவை திறக்க முயன்றுள்ளாா். அப்போது, லாரியின் ஒரு பகுதி மேலே சென்ற உயா் மின்அழுத்த கம்பியில் உரசியதில், லாரி முழுவதும் மின்சாரம் பரவியது. இதில், மின்சாரம் பாய்ந்து சாமிக்கண்ணு தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments