10 பைக்குள் பறிமுதல்: இளைஞா் கைது
வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்குகள் திருட்டு தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்குகள் திருட்டு தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் தனிப்படை போலீஸாா் மேட்டுப்பாளையம் பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனா். முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், ஓட்டி வந்த பைக் திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது. தொடா்ந்து இளைஞரிடம் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடியிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், இளைஞா் கொடுத்த தகவலின்பேரில், திருடிய 10 பைக்குகள் கைப்பற்றினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட தும்பேரி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.