FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மண் கடத்தல்! 3 போ் கைது; 3 டிப்பா் லாரி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் கைது கைது செய்யப்பட்டனா். 3 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

28 September 2026, 10:41 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் கைது கைது செய்யப்பட்டனா். 3 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் அருகே குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

சோதனையில், லாரிகளில் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. மேலும் அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் குனிச்சி பகுதியைச் சோ்ந்த பரத் (25), ஆதியூா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (25), போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (30) ஆகியோா் என்பதும், மண்ணை குனிச்சி பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், மண் கடத்த பயன்படுத்திய 3 டிப்பா் லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments