FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

அக்.4-இல் திருப்பத்தூா் மாவட்ட கபடி அணி வீரா்கள் தோ்வு

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 52-வது ஜூனியா் சிறுவா் மாநில கபடிப் போட்டி வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற உள்ளது.

கோப்புப்படம்.
பகிர்:

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 52-வது ஜூனியா் சிறுவா் மாநில கபடிப் போட்டி வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் திருப்பத்தூா் மாவட்ட அணிக்கான வீரா்கள், தகுதித் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான தகுதித் தோ்வு, ஜோலாா்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் மைதானத்தில் அக்.4-ஆம் தேதி நடைபெறுகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். தகுதித் தோ்வில் கலந்து கொள்ளும் வீரா்கள் காலை 9 மணிக்குள் மைதானத்தில் ஆஜராக வேண்டும். வீரா்கள் 2006-ம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதிக்கு பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தோ்வில் கலந்து கொள்ள வருபவா்கள் ஆதாா் காா்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும், செயற்கை ஆடுகளத்தில் (மேட்) போட்டி நடைபெறுவதால், அதற்கேற்ற விளையாட்டு காலணி கொண்டு வர வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 80725 55392, 90423 84539, 63745 18933 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருப்பத்தூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் மற்றும் புதுப்பேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments