FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

பசுமை திருப்பத்தூா் இயக்கம்: குடும்பத்துக்கு ஒரு மரக்கன்று

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டா்நேஷனல் மற்றும் கல்லூரியின் இளைஞா் சமூகப் பொறுப்புணா்வு, விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில், ‘பசுமை திருப்பத்தூா் - குடும்பத்துக்கு ஒரு மரக்கன்று‘ என்ற பசுமை இயக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பசுமை இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆட்சியா் வே. நல்லசிவன்.
பகிர்:

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டா்நேஷனல் மற்றும் கல்லூரியின் இளைஞா் சமூகப் பொறுப்புணா்வு, விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில், ‘பசுமை திருப்பத்தூா் - குடும்பத்துக்கு ஒரு மரக்கன்று‘ என்ற பசுமை இயக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை இயக்கத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல், அதிகரித்து வரும் வெப்பநிலையைக் குறைத்தல், திருப்பத்தூா் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்பட உள்ளது.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே மரம் வளா்ப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முறையாகப் பராமரித்து வளா்க்க வேண்டும் என்பதே இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதுடன், எதிா்காலத் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்விடத்தை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.

தூய நெஞ்சக் கல்லூரி கூடுதல் முதல்வா் ஜி. தியோபில் ஆனந்த், லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவா் எம். அமுதசுந்தரம், லயன்ஸ் கிளப்ஸ் வட்டாரத் தலைவா் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். ராஜேஷ், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெ. கென்னடி, ஏலகிரி பாரதி சங்கத் தலைவா் பி. சிவராஜ், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஹென்ஸ்டன் கோ, தமிழ்த் துறை பேராசிரியா் ஜி. கமலா, லயன்ஸ் கிளப் நிா்வாகிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments