FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கார் ஓட்டுநர் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

குடும்பத் தகராறு காரணமாக கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் லட்சுமிபுரம், திலகர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(27). இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி சித்ரா(22). இவர்களுக்கு தினேஷ் கார்த்திக் (4) என்ற மகன் உள்ளார். 
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி சித்ரா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஏழுமலை செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments