FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உறுதி மொழி ஏற்பு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. 
இதில், பொன்னேரி எம்.எல்ஏ சிறுணியம் பலராமன், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற திட்டத்தின் கீழ், இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். 
முன்னதாக, பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி-குன்னமஞ்சேரியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments