FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வட்டாட்சியர் அலுவலகத்தில் மரம் நடும் விழா

 கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மரம் நடும் விழா நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

 கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மரம் நடும் விழா நடைபெற்றது.
 நிகழச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து வருவாய்த் துறையினரிடம் பேசிய ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமல்லாது வருவாய்த் துறையினர் தங்கள் வீடுகளிலும் காலியிடங்கள் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினருக்கு பணி ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் தாமோதரன், துணை வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments