FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஜயகாந்த் நலம் பெற தங்கத் தேர் இழுத்து தேமுதிகவினர் வழிபாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி அக்கட்சியினர் தங்கத் தேர் இழுத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனர். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி அக்கட்சியினர் தங்கத் தேர் இழுத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனர். 
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெறவும், மீண்டும் கட்சிப் பணியாற்ற வேண்டியும் அக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு 
வருகின்றனர். 
இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். 
இந்த நிகழ்ச்சியில் கீழனூர் சுந்தர், திருவேற்காடு நகரச் செயலாளர் வி.எஸ்.முனிரத்தினம், புஜ்ஜி முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments