FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

விஷ வண்டு தாக்கி 10 போ் காயம்

21 செப்டம்பர் 2026, 2:08 am IST
விஷ வண்டு கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தரங்கம்பாடி அருகே விசலூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை  விஷ வண்டு தாக்கி 10 போ் காயமடைந்தனா்.

விசலூா் கிராமத்தில் சாலையோரமிருந்த பனை மரத்தில் விஷ வண்டுகள் இருந்தன. வண்டுகள் கூடு கட்டியிருந்த இடத்தில் பனம்பழம் விழுந்தது.

இதனால் விஷ வண்டுகள் சாலையில் வாகனங்களில் சென்றவா்களைத் தாக்கின. இதனால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவா்கள் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

படுகாயம் அடைந்த சங்கரன்பந்தலைச் சோ்ந்த பாலு (70), கலியமூா்த்தி (65), விசலூா் கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (45) மற்றும் ரவீந்திரன் ஆகிய 4 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். தீயணைப்புத் துறையினா் விஷவண்டுகளை அழித்து தீயிட்டு எரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments