FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாயிகள் பயன்பெற 5 இடங்களில் நெல் கொள்முதல் மையம் : செப். 30 வரை செயல்படும்

விவசாயிகள் பயன்பெறும்நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


விவசாயிகள் பயன்பெறும்நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் 1.40 லட்சம் ஹெக்டேரில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இதில், ஒவ்வொரு பருவத்திலும் நெல் பயிர் மட்டும் 40 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, சொர்ணவாரி பருவத்தில் பயிரிட்டுள்ள நெல்லுக்கான அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், இடைத்தரகர்களால் ஒரே விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத் கருத்திற்கொண்டு விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லுக்கு சரியான ஆதார விலை கிடைக்கவேண்டும் என்பதற்காக இம்மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 5 இடங்களில் அமைக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் சோழவரம்-செம்புலிவரம், ஊத்துக்கோட்டை-கச்சூர், திருவள்ளூர்- புலியூர், பூந்தமல்லி-குத்தம்பாக்கம் (வெள்ளவேடு), மீஞ்சூர்-மெதூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இங்கு விவசாயிகள் 17 சதவீதம் ஈரப்பதத்திற்கு மிகாமல் நன்கு உலர்த்திக் கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இந்த மையங்களில் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையாக ஒரு குவின்டால் சன்ன ரகம் ரூ.1,660 எனவும், பொது ரகம் ரூ.1,600 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30 வரை செயல்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments