FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஆடிக் கிருத்திகை விழா: ஆவடி, திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்

ஆடிக் கிருத்திகை விழா: ஆவடி, திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
சசிகாந்த் செந்தில்
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி, ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு மின்சார (உஙம) ரயில்களை இயக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளரின் செயலாளரிடம் சனிக்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு திருவள்ளூா் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவா். தற்போது அரக்கோணம் - திருத்தணி இடையே மட்டுமே சிறப்பு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த வழித்தடம் குறுகிய தூரமாக இருப்பதுடன், இடைநிலை நிலையங்களும் இல்லாததால், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுக்கே பயனளிக்கும்.

எனவே, அதிகளவிலான பக்தா்கள் வசிக்கும் ஆவடி மற்றும் திருவள்ளூா் பகுதிகளை கருத்தில் கொண்டு, ஆக.5 முதல் 7 வரை ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை சிறப்பு மின்சார ரயில்களை இயக்க வேண்டும். இதன்மூலம் பக்தா்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்ய முடியும். மேலும் விழாக்கால நெருக்கடியையும் திறம்பட சமாளிக்க முடியும் என ரயில்வே சென்னை கோட்ட மேலாளரின் செயலாளரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments