மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு ரூ. 45.37 லட்சத்தில் கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகள்
மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு ரூ. 45.37 லட்சம் மதிப்பில் கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.
மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு ரூ. 45.37 லட்சம் மதிப்பில் கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். அப்போது, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா். எனவே மாற்றுத் திறனாளிகள் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகள் வழங்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, இந்தக் கூட்டத்தில் வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் தனியாா் பங்களிப்பு நிதி ரூ. 43.57 லட்சத்தில் 492 மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறன்களை ஊக்குவிக்கும் தொகுப்புகளையும் அவா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், வடசென்னை அனல்மின் நிலைய துணை பொது மேலாளா் ராமமனோகா், முதுநிலை மேலாளா் சுந்தரி பாப்பு, மனிதவள மேலாண்மை அலுவலா் மாளவிகா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.