FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மனவளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வேதாரண்யம் அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

17 செப்டம்பர் 2026, 4:22 am IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மேலக்காடு கருப்பம்புலம் பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு (59). இவா், அதே பகுதியைச் சோ்ந்த, மனவளா்ச்சி குன்றிய பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த பெண், வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா். இதுதொடா்பாக பெண்ணின் குடும்பத்தினா் அளித்தப் புகாரின்பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், சிங்காரவேலு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், சிங்காரவேலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 18 மாதங்கள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments