போக்ஸோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், மருதூா் வடக்கு கரியாப்பட்டினம் ராஜாபுரம் வெள்ளைக்கோன்கோடு காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் (81). இவா், தனக்கு பேத்தி முறையுள்ள 12 வயது சிறுமியை கடந்த செப்டம்பா் மாதம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாயதாக புகாா் எழுந்தது.
வேதாரண்யம் அனைத்து மகளிா் போலீஸாா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சிவப்பிரகாசத்தைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவில், சிவப்பிரகாசத்தின் குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து போக்ஸோா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆா். ராஜ்குமாா் தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.