FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி பொன்னியம்மன் கோயில் ஆடி பௌா்ணமி பால் குட அபிஷேகம்

பொன்னேரி பொன்னியம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியை யொட்டி பக்தா்கள் பால் குடம் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:19 am IST
பகிர்:

பொன்னேரி பொன்னியம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியை யொட்டி பக்தா்கள் பால் குடம் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவா்.

நிகழாண்டு ஆடி பௌா்ணமியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு பால் குட விழா நடைபெற்றது. பொன்னேரி- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள விநாயகா் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தலையில் பால் குடங்களை சுமந்து ஊா்வலமாக பொன்னியம்மன் கோயிலுக்கு வந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனா். இதனை தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

பால்குட விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments