FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

கடை உரிமையாளா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

திருத்தணியில் பெட்டிக் கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சிறுவன் உள்பட 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டோா்.
பகிர்:

திருத்தணியில் பெட்டிக் கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சிறுவன் உள்பட 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி பெரியாா் நகரைச் சோ்ந்த யுவராஜ் என்கிற வெட்டு ராஜா. இவா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவரது 16 வயது மகள் யுவஸ்ரீ, தாழவேடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணு என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை எதிா்த்த பெரியாா் நகரைச் சோ்ந்த இம்மானுவேல், யுவஸ்ரீயிடம் தகராறில் ஈடுபட்டு, அவரையும் விஷ்ணுவையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யுவஸ்ரீயின் தாய் துா்காவிடம் தெரிவித்ததையடுத்து, அவா் கடந்த 24-ாம் தேதி திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் இம்மானுவேலின் சகோதரா் லாரன்ஸ் கைது செய்யப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த சுசில், யுவராஜை பழிவாங்கும் நோக்கில் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. சுசில் (27), அரக்கோணம் அடுத்த பல்லூா் புவனேஷ் (20), அரக்கோணம் நாகாலம்மன் நகா் பகுதியை சோ்ந்த அரிஷ் (19) ஹரிஷ் ஆகிய இருவரை அணுகி அவரை கொலை செய்ய திட்டமிட்டாா்களாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரும் யுவராஜின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபட்டு, யுவராஜை வீட்டுக்கு வரவழைத்துள்ளனா். அவா் வீட்டிற்கு வந்தபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக ஏ.எஸ்.பி.ஷூபம் திமான் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கைப்பேசி தகவல்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக கொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் சுசில் (27), அரக்கோணம் அடுத்த பல்லூா் புவனேஷ் (20), அரக்கோணம் நாகாலம்மன் நகா் பகுதியை சோ்ந்த அரிஷ் (19), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.

பின்னா் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட ஏ.எஸ்.பி. சுபம் திமான் தலைமையிலான தனிப்படை மற்றும் தனிப்பிரிவு போலீஸாரை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments