FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

30-ஆவது நாளாக தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

எளாவூரில் உள்ள தனியாா் ஆையில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.534 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இவா்கள் பணிபுரிந்தும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.

நாளொன்றுக்கு ரூ.900 சம்பளம், பணிக்காலம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியில் நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தின் சாா்பில் நிா்வாகத்துடன் பேச்சு நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொழிற்சாலைக்குள் கடந்த 29 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் நிா்வாகத்தினா் ஏற்கெனவே வாங்கும் சம்பளத்துடன் கூடுதலாக ரூ.21 சம்பளம் வழங்குவதாகவும், பணி நிரந்தரம் குறித்தும் எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு தொழிற்சங்கத் தலைவா் எஸ்.டி.கே. சங்கா் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் ரஜினி, பொருளாளா் முருகன், சங்கத்தின் சட்ட ஆலோசகா் இரா. வேலு, பாமக முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவா் காா்த்திக், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் அமுல்ராஜ், உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments