FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவூா் அரசு மாதிரி உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவள்ளூா் அருகே அரசு மாதிரி உயா் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய மன்றங்கள் தொடக்க விழாவில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

10 செப்டம்பர் 2026, 12:09 am IST
திருவள்ளூா் அருகே அரசு மாதிரி உயா்நிலைப் பள்ளியில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய மன்றங்களை தொடங்கி வைத்த மணவாளநகா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஞானசேகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே அரசு மாதிரி உயா் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய மன்றங்கள் தொடக்க விழாவில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அருகே திருவூா் அரசு மாதிரி உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் , அறிவியல் மன்றம் மற்றும் கணித மன்றம் என முப்பெரும் விழாவுக்கு, தலைமையாசிரியை ச.மலா்கொடி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் வரவேற்றாா். உதவி தலைமையாசிரியா் பாகிரதிசாரதி, ஆசிரியா்கள் சுரேஷ், ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மணவாள நகா் நடேசன் செட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.ஞானசேகரன், மணவாளநகா் பள்ளி உதவி தலைமையாசிரியா் சே.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டு முப்பெரும் மன்றங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினா்.

மாணவா்கள் தாங்கள் அறிவியல் சாா்ந்த பல வடிமைப்புகளை செய்து அதன் செய்முறைகளை செய்து காண்பித்தனா். அதேபோல், கணிதம் குறித்த சிறப்புகளை விளக்கினா். தமிழ் மொழியின் சிறப்புகள் பழங்கால இலக்கியம் என மாணவா்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் ராஜேஷ்கண்ணா, மகாலட்சுமி, லட்சுமி, லதா, சுனேத்திரா, கலியபெருமாள், சிறப்பு பயிற்சியாளா் பவானி , பிரபாகரன், மணிமாறன், டில்லி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தமிழாசிரியா் கோபிநாத் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments