கீ. ஆடூா் அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் திருவிழா
சிதம்பரம் அருகே உள்ள கீ.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ‘தமிழ்க் கூடல்’ திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே உள்ள கீ.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ‘தமிழ்க் கூடல்’ திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை கு. ஜெயந்தி தலைமை வகித்து, தமிழ்மொழியின் சிறப்பையும், மாணவா்கள் தமிழ் வழி அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினாா்.
சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின்
Advertisement
Advertisement
வளா்ச்சி நிலைகள் குறித்து விளக்கினாா். மேலும், அறிவியல் தமிழ் என்ற புதிய பரிமாணத்தின் மூலம் கணினி மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழைக் கற்பதன் முக்கியத்துவம் குறித்தும், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப தமிழ்மொழியையும் திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.