சத்துணவு முட்டைகள் விற்பனை: அமைப்பாளா் பணியிடை நீக்கம்
குறிஞ்சிப்பாடி அருகே கோச்சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 230 சத்துணவு முட்டைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ாகக் கூறப்படும் சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கோச்சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 230 சத்துணவு முட்டைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ாகக் கூறப்படும் சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கோச்சத்திரம் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி மாணவா்கள் புத்தகக் கண்காட்சிக்காக வெளியே சென்றிருந்தபோது, அவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 230 சத்துணவு முட்டைகளை அமைப்பாளா் விஜயா விற்பனைக்காக பையில் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டது. மாணவா்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை எடுத்துச் சென்ாக எழுந்த புகாா் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சத்துணவு அமைப்பாளா் விஜயாவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.