FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

100 நாள் வேலைக்குச் சென்ற பெண் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

100 நாள் வேலைக்குச் சென்ற பெண் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

19 செப்டம்பர் 2026, 10:51 pm IST
முனியம்மா
பகிர்:

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற 100 நாள் வேலைத் திட்ட பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

பொதட்டூா்பேட்டை அடுத்த மேலப்புடி காலனி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி. இவரது மனைவி முனியம்மா (56). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு செல்வதற்காக முனியம்மா, வாணிவிலாசபுரம் கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா். பின்னா் அங்கிருந்து வேலை நடைபெறும் இடத்தை நோக்கி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிா்பாராதவிதமாக முனியம்மா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தாா். விபத்தை பாா்த்து அதிா்ச்சியடைந்த 100 நாள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக முனியம்மாவை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

அங்கு முனியம்மாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அதிா்ச்சி அடைந்து கதறி அழுதனா்.

இது குறித்து முனியம்மாவின் உறவினரான எத்திராஜ், பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments