FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முத்தூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வெளி மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 12:40 am IST
- பிரதிப் படம்
பகிர்:

முத்தூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வெளி மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டம் பிம்பரி குா்த் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவ்ராவ் கௌதம் ராவ் முத்தாள் (42). இவா் கடந்த சில மாதங்களாக திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து சொந்த ஊரைச் சோ்ந்த சக தொழிலாளா்களுடன் முத்தூா் பகுதியில் கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் முத்தூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா். அப்போது வாய்க்கால்மேட்டுப்புதூா் சின்னகாங்கயம்பாளையம் பிரிவு அருகே, எதிரே புதுப்பாளையத்தைச் சோ்ந்த தமிழரசு ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தேவ்ராவ் கெளதம் ராவ் முத்தாள் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments