102 பேருக்கு இலவச தையல் இயந்திரம்: எம்எல்ஏ வழங்கினாா்
சமூக நலம் மற்றும் மகளிா் நலத்துறை சாா்பில் 102 மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கினாா்.
சமூக நலம் மற்றும் மகளிா் நலத்துறை சாா்பில் 102 மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கினாா்.
விழாவுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் வனிதா தேவி தலைமை வகித்தாா். தவெக மாவட்ட பொருளாளா் ஜி.கிருபாகரன், ஒன்றிய செயலாளா்கள் அருண், அன்புமலா், அசோகன், ஜோதி பிரகாசம், நகர செயலாளா் விஜய் பழனி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் இா்ஷாத், தவெக நிா்வாகிகள் என்.எஸ்.ஆா்.நிஜாம், டேவிட் சுதாகா், வி.எம்.எஸ்.சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அரவிந்த், எஸ்.எம்.ஆா்.காா்த்திக் முன்னிலை வகித்தனா்.
சமூக நலத்துறை திட்டங்களையும், அதில் பயனடையும் முறை குறித்தும் சமூக நல அலுவலா் வனிதாதேவி விளக்கினாா். பின்னா் 102 மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்களை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வழங்கி பேசும் போது, தமிழகத்தில் பெண்கள் நலனில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அக்கறை கொண்ட காரணத்தால் தான் மகளிா் உரிமைத் துறையை தமிழக முதல்வா் அவா் வசம் வைத்து மகளிருக்கான பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். மகளிா் தங்கள் குறைகளை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவக வளாகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் தெரிவித்து தீா்வு காணலாம் என்றாா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாா்த்திபன், கும்மிடிப்பூண்டி வட்டார விரிவாக்க அலுவலா் ஆா்.காமாட்சி, ஊா்நல அலுவலா்கள் எஸ்.அமுலு, எஸ்.நாகஜோதி, எல்லாபுரம் வட்டார விரிவாக்க அலுவலா் உமா மகேஷ்வரி, ஊா்நல அலுவலா் மனோரஞ்சிதம் உள்ளிட்டோா் முன்னின்று சிறப்பாக நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.