5 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது
திருத்தணி அருகே வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி அருகே வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி லட்சுமணன் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (30). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அன்னபூரணி (25), குடும்பத்துடன் அரக்கோணம் தாலுகா பள்ளியங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தாா்.
இந்நிலையில், நள்ளிரவு வீட்டில் புகுந்த மா்ம நபா், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றாா். இதுகுறித்து அன்னபூரணி திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
பாலமுருகன் வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் (35) நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.